கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற 9-வது ஆசிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான ‘வால்ட்’ பிரிவில் இந்திய வீராங்கனை பிரனதி நாயக் 13.367 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
தென்கொரியா வீராங்கனை தங்கப்பதக்கத்தையும், ஜப்பான் வீராங்கனை வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர். ஆசிய சாம்பியன்ஷிப்பில் பிரனதி நாயக் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும்.