அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும், அந்த தலைமைக்கு எடப்பாடி கே பழனிசாமியே அவர்களின் விருப்பமாக உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், தற்காலிகமாக பொதுக்குழுவை ஒத்தி வைக்க கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொதுக்குழுவை தற்காலிகமாக ஒத்தி வைக்கும் முடிவு குறித்து தம்பிதுரை இடம் ஓ பன்னீர்செல்வம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என்று 200 முதல் 250 பேரிடம் ஒத்திவைப்பு தீர்மானத்தின் ஓ பன்னீர்செல்வம் கையெழுத்துப் பெற்றிருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக நான் சமரசம் செய்து கொண்டது போதும், இனிமேல் எந்த சமரசத்திற்கும் வாய்ப்பு இல்லை என்று தம்பிதுரையிடன் ஓபிஎஸ் தெரிவித்ததாக அந்த பரபரப்பு தகவல் தெரிவிக்கின்றது.