Happy Fathers Day: தமிழ் சினிமாவில் ‘அப்பா’வாக அசத்திய நடிகர்கள் யார்?

இயக்குநர் ராமின் ‘தங்கமீன்கள்’

தங்கமீன்கள் படத்தில் வரும் அப்பா கதாபாத்திரம் நம் மனதில் எப்போதும் நீங்க இடம் பிடித்திருக்கும்.  மலை உச்சியில் பச்சை புல் வெளியில் மேகங்கள் சூழ, ‘ மகளை பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல’ என்ற வரிகளை இயக்குநர் ராம் கூறுவார்.  தனது குழந்தையை  நல்ல பள்ளியில் படிக்க வைக்க தனது நண்பர் முன் கடன் கேட்டு நிற்கும் இடமாக இருக்கட்டும். ஒரு நாய்குட்டியை வாங்க அவர் செலுத்தும் கடின உழைப்பாக இருக்கட்டும். இந்த இயற்கையை தனது மகளோடு ரசிக்கும் இடமாக இருக்கட்டும். மகளை பிரிந்து வாடும் காட்சிகளில் நம் கண்கள் நீர் பெருக்கெடுக்கும் அளவிற்கு ராமின் நடிப்பு இருக்கும்.  

அபியும் நானும்

தனது மகள் மீதுதான் வெண்ணீர் ஊற்றபட்டது  என்று தவறாக நினைத்துக்கொண்டு, அம்மாவின் கண்ணத்தில் அறையும் காட்சியாக இருக்கட்டும். மகளை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும் காட்சியாக இருக்கட்டும். தனது பரிதவிப்பு, அன்பை வெளிப்படுத்தும் காட்சியில் அசத்தியிருப்பார் பிரகாஷ் ராஜ். ‘ I know what I am doing’ என்று தனது மகள் கூறும்போது, தனது நடிப்பில் ஒரு அப்பாவின் இயலாமையையும் பாசத்தையும் வெளிகாட்டியிருப்பார் பிரகாஷ் ராஜ்.

விஸ்வாசம்

அஜித் மாஸாக பல படங்கள் நடித்திருந்தாலும் அவர் நடித்த விஸ்வாசம் படத்தில் ஒரு அப்பாவாக அசத்தியிருப்பார்.  ஒட்டபந்தயத்தில் தனது மகளை உச்சாகப்படுத்தும் காட்சியிலும், தனது மகள் என்று தெரிந்தும் அவதை வெளிப்படுத்த இயலாத காட்சியிலும் அவர் அசத்தியிருப்பார்.

தெய்வத் திருமகள்

ஆங்கிலப்படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட  தெய்வத் திருமகள் படத்தில் நடிகர் விகரம் மனநல பாதிக்கபட்ட அப்பாவாக நடித்திருப்பார். தன்னால் முடியாத நிலையிலும் தனது மகளுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையை விகரம் தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருப்பார். மேலும் நீதிமன்றத்தில் மகளை பார்க்கும் காட்சியில், தனது ஏக்கத்தையும் பரிதவிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படத்தில் இறுதி காட்சியில் அமலாபாலிடம் குழந்தையை அவரே கொடுக்கும் காட்சியில் அவரது நடிப்பு மூலம் பார்வையாளர்களுக்கு அழுகையை வரவைத்துவிடுவார்.

தவமாய் தவமிருந்து

இத்திரைபடத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜ்கிரண், தனது மகனுக்காக அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வார்.  சைக்கிள் மிதித்து அவர் செய்யும் பயணம், அந்த பாடல் இப்படி பல காட்சிகளில் நமது மனதில் நிலைத்திருப்பார்.

எம்டன் மகன்

ஒரு வில்லனான அப்பாவை அப்படியே திரையில் காட்டியிருப்பார்கள். மகனாக நடித்திருக்கும் பரத் அவரை பார்த்து நடுங்கும் காட்சியாக இருக்கட்டும், மகனுக்கு பிடிக்காத ஈரலை கட்டாயப்படுத்தி அவனுக்கு ஊட்டும் காட்சியாக இருக்கட்டும் ஒரு கொடூர அப்பாவாக தனது நடிப்பு மூலம் அசத்தியிருப்பார்.  வடிவேலுடன் அவர் சேரும் காட்சியிலும் , மனைவியுடன் இணைந்து நடிக்கும் காட்சிலும் அசத்தியிருப்பார் நாசர். நாசர் ஏற்று நடித்த இந்த கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

நானும் ரவுடிதான்

இத்திரைப்படத்தில் அதிக காட்சிகள் வராவிட்டாலும், நமது மனதில் நீங்கா இடம் பிடித்துருக்கிறார் அழகம்பெருமாள். காது கேட்காத தெரியாத மகள் மீது அதிக பாசத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பார். மேலும் அவர் கொலை செய்யப்படும் காட்சியில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ராஜ ராணி

தனது மகள் தனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டார் என்று தெரிந்தும், அவளுக்காக  மாப்பிள்ளை வீடு வரைச் சென்று பேசுவார். தனது மகளை உடன் அழைத்துச் செல்வார்.  மேலும் தனது மகளுடன் ஒரு நண்பரைப் போல் பழகும் காட்சியில் ஒரு கூல் டாடியாக நடித்திருப்பார் சத்தியராஜ். எல்லா விஷயங்களை உட்கார்ந்து பேசுவதுதான் தந்தை- மகள் உறவு என்பதை தனது நடிப்பு மூலம் வெளிக்காட்டியிருப்பார் சத்தியராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.