பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 -க்கும் டீசல் லிட்டர் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரயில் சேவை நிறுத்தம்
பீகாரில் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தீவிர போராட்டங்கள் காரணமாக இன்றிரவு 8 மணி வரை மாநிலமெங்கும் ரயில் சேவை நிறுத்தம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் : 2 வது நாளாக பலத்த பாதுகாப்பு
ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் தொடரும் போராட்டம். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- ராகுல்காந்தி
தனது பிறந்தநாளான இன்று எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பொது மக்களுக்கு உதவுமாறு ராகுல்கந்தி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது . ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும், அதை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்