Telecom subscribers in india 2022: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
Internet Explorer: இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்காக கல்லறை… பொறிக்கப்பட்ட வாசகத்தால் ஷாக் ஆன மைக்ரோசாப்ட்!
இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. 35.5 விழுக்காடு சந்தை மதிப்புடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்திலும், 31.61 விழுக்காடு சந்தை மதிப்புடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 22.68 விழுக்காட்டுடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வயர்லெஸ் பயனர்கள்
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது.
Nothing Phone 1: வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு வரும் 100 நத்திங் போன் 1 லிமிட்டட் எடிஷன் போன்கள்!
அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னணியில் ரிலையன்ஸ் ஜியோ
புதிதாக 16.82 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 40.5 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் முதல் நிலையில் உள்ளது. அதேபோல 8.1 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ஏர்டெல் நிறுவனம் 36.11 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மறுபுறம் 15.68 லட்சம் பயனர்களை இழந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்துள்ளது நிறுவனத்தின் சேவை வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
INBook X1 Slim: இப்புடி டஃப் கொடுக்கலாமா இன்பினிக்ஸ்; i7 லேப்டாப் விலை இவ்வளவு தானா!
பிராட்பேண்ட் சேவைகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 3.31 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 71 ஆயிரத்து 297 பிராட்பேண்ட் பயனர்களை பெற்றுள்ளது.
பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 25.85 விழுக்காடாகவும், ஏர்டெல் 23.54 விழுக்காடாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.51 கோடி அதிகரித்துள்ளது.
திட்டங்களின் விலையேற்றம்
இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கணிசமாக உயர்த்தி வருகிறது. எனினும், சந்தாதாரர்களை தக்கவைத்துக் கொள்ள பல சலுகைகளும் வழங்கப்படுகிறது.
Galaxy F13: சாம்சங்கின் பட்ஜெட் கிங் கேலக்ஸி எஃப்13 விரைவில்… இவ்ளோ பெரிய பேட்டரியா!
முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ தனது ரீசார்ஜுகளின் கட்டணத்தை 20% வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து நிறுவனங்களும் இதே முறையை கையாளும் என்று கூறப்படுகிறது.