புதுடெல்லி,
அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்று இருந்தனர்.
ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ப.சிதம்பரம் கூறுகையில் “அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சரியான விளக்கம் இல்லை. அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம் உள்ளன. எனவே, அக்னிபத் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். எவ்வித ஆலோசனையும் இன்றி அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.” என்றார்.