அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் எதிரொலி; பிளாட் பார்ம் டிக்கெட்டை நிறுத்தியது தெற்கு ரயில்வே

Platform ticket Cancelled due to protest against Indian army’s Agnipath Recruitment Scheme: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவதை தென்னக ரயில்வே தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்திய ஆயுதப்படை சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டும் பணி செய்ய முடியும், ஓய்வூதியம் கிடையாது என்பதால் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பொதுக்குழு முடிவை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் ஏற்பார்கள்: கே.பி முனுசாமி

இந்தநிலையில், சில இடங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும், வட மாநிலங்களில் சில இடங்களில் ரயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பல்வேறு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், போராட்டங்களின் எதிரொலியாக பிளாட் பார்ம் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தால், ரயில் நிலையங்களில் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், பாரத் பந்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு தெற்கு ரயில்வே, தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், பிளாட்பார்ம் டிக்கெட் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.