அக்னிபாத் ஒரு சிறப்பான திட்டம்.. டாடா சன்ஸ் என் சந்திரசேகரன் ஆதரவு..!

மோடி அரசின் அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்த நாளில் இருந்து எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.

237 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 4% உயர்வு..!

இதேவேளையில் பல தொழிலதிபர்கள், நிறுவன தலைவர்கள் மோடி அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டாடா சன்ஸ் என் சந்திரசேகரன்

டாடா சன்ஸ் என் சந்திரசேகரன்

டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் திங்களன்று ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இளைஞர்கள் பாதுகாப்புப் படைகளுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பைத் தவிர, டாடா குழுமம் உட்பட தொழில்துறைக்கு மிகவும் ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களையும் இது வழங்கும் என்றார்.

முக்கிய தலைவர்கள்

முக்கிய தலைவர்கள்

இதன் மூலம் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் கூட்டு நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி என இத்திட்டத்திற்கு ஆதரவு அளிப்போர் பட்டியலில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனும் இணைந்துள்ளார்.

ஒழுக்கமான இளைஞர்களை
 

ஒழுக்கமான இளைஞர்களை

“அக்னிபாத் இளைஞர்களுக்கு தேசத்தின் பாதுகாப்புப் படைகளுக்குச் சேவை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு மட்டுமல்ல, டாடா குழுமம் உட்பட தொழில்துறைக்கு மிகவும் ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் கிடைக்கச் செய்யும்” என்று சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

அவர் மேலும் கூறுகையில், “டாடா குழுமத்தில் உள்ள நாங்கள் அக்னிவீர்-களின் திறனை அங்கீகரிக்கிறோம் மற்றும் இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்பை வரவேற்கிறோம்.” என்றும் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

4 வருட பணி

4 வருட பணி

மத்திய அரசின் இந்த திட்டத்தின்படி “அக்னிவீர் ” எனப்படும் ராணுவ வீரர்கள் முப்படைகளில் 4 வருட பணிக்கு அமர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 4 வருட பணிக்கு பின்பு இவர்களின் எதிர்காலம் என்ன என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

போராட்டம்

போராட்டம்

பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மக்களின் போராட்டம் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் நாடு முழுக்க 900 ரயில்களுக்கும் மேலாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. 80 ரயில் பெட்டிகள் தீ வைக்கப்பட்டு உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Agnipath great opportunity for youth: Tata Sons Chairman N Chandrasekaran

Agnipath great opportunity for youth: Tata Sons Chairman N Chandrasekaran அக்னிபாத் ஒரு சிறப்பான திட்டம்.. டாடா சன்ஸ் என் சந்திரசேகரன் ஆதிரவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.