அப்ரைசல் மட்டும் வரட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி..!

இந்திய வர்த்தகச் சந்தையில் ஒரு பக்கம் வர்த்தகம், முதலீடு இல்லாமல் தவித்து வரும் நிலையில் மறுபுறம் அதிகப்படியான வர்த்தகம், கைநிறைய பணம் என வசதியாக உள்ளது.

ஆனால் இரு பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குத் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சனை ஊழியர்கள் வெளியேற்றம் தான்.

அதிலும் குறிப்பாகப் பல லட்சம் ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்வதற்காகக் காத்திருக்கின்றனர், ஆனால் அனைவரையும் தடுக்கும் ஓரே ஒரு விஷயம் சம்பளம் உயர்வு மட்டுமே.

உங்க பணம் இப்போதைக்கு கிடைக்காது.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஷாக்..!

ஊழியர்கள் ராஜினாமா

ஊழியர்கள் ராஜினாமா

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அடுத்த மாதம் அளிக்க உள்ள நிலையில், குறைவான சம்பள உயர்வைப் பெறும் ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர், குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தை சிறப்பாக இருக்கும் நிலையிலும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ரெடியாக உள்ளனர்.

10ல் 4 ஊழியர்கள்

10ல் 4 ஊழியர்கள்

இதுகுறித்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சம்பள உயர்வுக்குப் பின்பு 10 ஊழியர்களில் 4 ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலைக்குச் செல்ல தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஐடி துறை
 

ஐடி துறை

அதிலும் குறிப்பாகச் சேவை துறையில் 37 சதவீத ஊழியர்களும், உற்பத்தி துறையில் 31 சதவீத ஊழியர்களும், ஐடி துறையில் 27 சதவீத ஊழியர்களும் சம்பள உயர்வு கிடைத்த உடன் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

ஆண் ஊழியர்கள்

ஆண் ஊழியர்கள்

இதைவிட முக்கியமாக ஆண் ஊழியர்கள் மட்டுமே கணக்கு எடுத்தால் 10 பேருக்கு 6 பேர் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும், அதுவும் சம்பள உயர்வு கிடைத்த உடனே பணியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.

தி கிரேட் ரெசிக்னேஷன் சர்வே

தி கிரேட் ரெசிக்னேஷன் சர்வே

தி கிரேட் ரெசிக்னேஷன் சர்வே 2022 பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 500க்கும் அதிகமான நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இந்திய நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் பெரிய அளவில் அதிகரிக்கும். இதற்கு முக்கியமான காரணம் நிறுவனங்கள் நாட்டின் பணவீக்க அளவை காட்டிலும் மிகவும் குறைவான சம்பள உயர்வை அளிப்பது தான்.

4 முக்கியக் காரணம்

4 முக்கியக் காரணம்

நமன் ஹெச்ஆர் நிறுவனம் செய்த ஆய்வில் பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் கூறிய காரணங்கள் என்ன தெரியுமா மெதுவான சம்பள வளர்ச்சி (54.8%), வேலை-வாழ்க்கை ஏற்றத்தாழ்வு (41.4%), வளர்ச்சி வாய்ப்புகள் இல்லாமை (33.3%) மற்றும் அங்கீகாரமின்மை (28.1%) இவை தான்.

நீங்களும் பணியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டு இருந்தால் என்ன காரணம் என்பதைக் கமெண்ட் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

4 out of 10 employees want to resign their job after salary hike: Great Resignation Survey 2022

4 out of 10 employees want to resign their job after salary hike: Great Resignation Survey 2022 அப்ரைசல் மட்டும் வரட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.