அவுஸ்திரேலியாவில் இருந்து பணம் அனுப்புவதற்கு விதிக்கப்படும் 6 டொலர் கட்டணத்தை விடுவிக்க அவுஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11ம் திகதி வரை இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணி பணத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அமைச்சர்
இதேவேளை, அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) இன்று இலங்கை வந்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திற்குள் இருந்துக்கொண்டு இலங்கைக்கு உதவுவதாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான, தமது அரசாங்கத்தின் முயற்சிகளையும் அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.