பிரிட்டன் நாட்டில், காவல் துறையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரின் ‘அந்தரங்க உறுப்பின் அளவை’ கேலி செய்து ‘சிறியது’ என்று கூச்சலிட்டதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிவைஸ் காவல் நிலையத்தில் நடந்தது. அப்போது சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட நபர் டிவைஸ் காவல் நிலையத்தில் புதிய காவலராக பணியில் சேர்ந்தார். தன்னை விட அனுபவம் குறைந்த நபர் மற்றும் இளைஞர் என்பதால், அந்த காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ரீட்ஸ் என்பவர், அவரை கொடுமைப்படுத்த முயன்றார்.
அவர் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் பேண்ட்க்கு உள்ளே கையை வைத்து, காவல் நிலையத்திலேயே மற்ற சக ஊழியர்கள் முன்னிலையில், புதிய பையனை கேலி செய்தார். சக காவலரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக உள்ளது என்று கேலி செய்து கூச்சலிட்டார். போலீஸ் அதிகாரியின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் மனமுடைந்து போனார். உடனடியாக, இந்த மோசமான சம்பவம் குறித்து உயர் அதிகாரியிடம் அவர் புகார் அளித்தார்.
கொரோனாவால் இப்படியொரு பிரச்சினை: பகீர் தகவல்!
விசாரணையில், அவர் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் பேண்ட்டை அவிழ்த்து உள்ளே கையை வைத்தார் என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், விளையாட்டுக்காக அவ்வாறு செய்ததாகவும் கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பை அளித்தது. இது போன்ற தகாத நடத்தையை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்து, சக ஊழியரை கேலி செய்த ரீட்ஸை அனைத்துப் பணிகளில் இருந்தும் உடனடியாக நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.