டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜூன் 20 மற்றும் 21ம் தேதிகளில் கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஜூன் 20ம் தேதி மதியம் சுமார் 12:30 மணியளவில், பிரதமர் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்துக்கு செல்கிறார், அங்கு அவர் மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார். மற்றும் பாக்சி-பார்த்தசாரதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார். மதியம் 1:45 மணியளவில் அவர் டாக்டர். பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலையைத் திறக்கிறார். கர்நாடகாவில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மாற்றியமைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நேஷன் 150 ‘தொழில்நுட்ப மையங்களை’ அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 2:45 மணியளவில், பெங்களூருவில் உள்ள கொம்மகட்டாவைச் சென்றடையும் பிரதமர், அங்கு ரூ.27,000 கோடி மதிப்பிலான பல ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார், பின்னர் மாலை சுமார் 5:30 மணியளவில், மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பிரதமர் கலந்துகொள்கிறார்.நாகனஹள்ளி ரயில் நிலையத்தில் பயிற்சி முனையத்திற்கு அடிக்கல் நாட்டி, அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தில் ‘தொடர்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சிறப்பு மையத்தை’ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்பின், இரவு 7 மணிக்கு, மைசூருவில் உள்ள ஸ்ரீ சுத்தூர் மடத்துக்குச் செல்லும் பிரதமர், இரவு 7:45 மணிக்கு, மைசூரில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலுக்குச் செல்கிறார்.ஜூன் 21ஆம் தேதி காலை 06:30 மணியளவில், 8வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பெங்களூருவில் பிரதமர்பெங்களூரில் இயக்கம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதற்கான ஒரு படியாக, பெங்களூரு நகரை அதன் புறநகர் பகுதிகள் மற்றும் துணை நகரங்களுடன் இணைக்கும் பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ.15,700 கோடி செலவிலான இத்திட்டம் மொத்தம் 148 கிமீ நீளம் கொண்ட 4 நடைமேடைகளைக் கொண்டதாகும். சுமார் ரூ.500 கோடி மற்றும் ரூ.375 கோடியில் முறையே மேற்கொள்ளப்படவுள்ள பெங்களூரு கண்டோன்மென்ட், யஸ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலையங்களின் மறுமேம்பாட்டிற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுவார்.இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் ரூ.315 கோடி செலவில் நவீன விமான நிலையத்தின் வடிவில் பையப்பனஹள்ளியில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். உடுப்பி, மதகான் மற்றும் ரத்னகிரியில் இருந்து மின்சார ரயில்களை கொடியசைத்து துவக்கி வைக்கும் பிரதமர், ரோஹா (மகாராஷ்டிரா) முதல் டோக்கூர் (கர்நாடகா) வரையிலான கொங்கன் ரயில் பாதையின் (சுமார் 740 கிமீ) 100 சதவீத மின்மயமாக்கலையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.1280 கோடிக்கும் அதிகமான செலவில் கொங்கன் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. அர்சிகெரே முதல் தும்குரு வரையிலான (சுமார் 96 கிமீ), பயணியர் ரயில்கள் மற்றும் யெலஹங்கா முதல் பெனுகொண்டா வரையிலான (சுமார் 120 கிமீ) மெமோ சேவை ஆகிய இரண்டு இரயில் பாதை இரட்டிப்புத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இரண்டு இரயில் பாதை இரட்டிப்பு திட்டங்களும் முறையே ரூ.750 கோடி மற்றும் ரூ.1100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.