புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி C30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் குறித்து சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது C30 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வரும் 27-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக இந்த போன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி நிறுவன வலைதளத்தில் இந்த போன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் கொண்ட டிஸ்பிளே. 120Hz டச் ஸேம்ப்ளிங் ரேட்.
- யுனிசோக் T612 புராசஸர். 5000mAh பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்.
- 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம். 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்.
- பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா. 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.
- நீலம் மற்றும் பச்சை என இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டூயல் சிம் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் இயங்குகிறது இந்த போன்.
இந்த போன் ரெட்மி, போக்கோ சி சீரிஸ் மற்றும் லாவா பிளாசா சீரிஸ் போன்களுக்கு சந்தையில் போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
2ஜிபி ரேம் கொண்ட போன் ரூ.7499 மற்றும் 3ஜிபி ரேம் கொண்ட போன் ரூ.8299 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்டையும் வரும் 27-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.