ஆப்டிகல் இல்யூஷன் எப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.
அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவை கிடையாது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் உண்மையில் மிகவும் சவாலானவைகள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் சவாலானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு நரி உள்ளது. ஆனால், இந்த படத்தில் இன்னொரு விலங்கு மறைந்திருக்கிறது. இந்த படத்தைப் பார்த்தவர்களில் மறைந்திருக்கும் விலங்கை 1% பேர்தான் கண்டுபிடித்துள்ளார்கள். நீங்களும் அந்த விலங்கை வேகமாக கண்டுபிடித்தால், அந்த 1% கூர்மையான பார்வைகொண்டவர்களின் வரிசையில் சேர்வீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் டிக்டாக்கில் @hecticnick வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மறைந்திருக்கிற இன்னொரு விலங்கை கண்டுபிடியுங்கள் என்ற சவாலில் இதுவரை 1 சதவீதம் பேர்தான் கண்டுபிடித்துள்ளார்கள். அதனால், பலரும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு முயற்சி செய்து கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளனர். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
இரண்டாவது விலங்கை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மரத்தில் எங்காவது பூனை தெரிகிறதா என்று பாருங்கள். கண்டுபிடித்துவிட்டால் பாராட்டுகள். கண்டுபிடிக்காவிட்டால் இரண்டாவது விலங்கு எங்கே இருக்கிறது என்று இங்கே பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“