இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலை உயர்வு, வரிசைகளில் காத்திருத்ததல் என பொதுமக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
குறிப்பாக எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் பொதுமக்கள் பல மணிநேரங்களாக காத்திருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவு செய்து சென்ற நிலையில் தற்போது மணித்தியாலங்கள் நாட்களாக மாறி பல நாட்கள் பொதுமக்கள் வரிசையிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் வகுக்க வேண்டிய மாற்று வியூகம்! |
பாதிக்கப்பட்டுள்ள துறைகள்
அத்துடன், எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக, அரச பணியாளர்கள், தனியார் துறை பணியாளர்கள் மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
விவசாய நடவடிக்கைகளும் கூட ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
வித்தியாசமான திருமண பரிசு
இவ்வாறான நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் திருமண வைபம் ஒன்றில் வித்தியாசமான பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருளின் தேவை மற்றும் பற்றாக்குறை எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி |
திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மணமக்களின் நெருங்கிய நண்பர்கள், மணமக்களுக்கு டீசல் கேன்கள் இரண்டை பரிசாகக் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இலங்கையின் தற்போதைய நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் என்பன விலையுயர்ந்த ஆடம்பர பொருட்களாக பார்க்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை ஏற்குமாறு மற்றுமொரு முக்கியஸ்தருக்கு வந்த அழைப்பு |