உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட அந்நாட்டு வீரர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி தொடங்கிய நிலையில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த போரில் ஏராளாமான உயிரிழப்புகளை இரு நாடுகளும் சந்தித்துள்ளது.
இந்நிலையில் மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
AP
மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த்தி வந்த அசோவ் படைப்பிரிவை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை ரஷ்ய படைகள் சிறை பிடித்துள்ளன.
அவர்கள் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் குறித்து உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் சரியாக எத்தனை உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் பிடியில் சிக்கியுள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை.