தற்போதைய டெக்னாலஜி உலகில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் சிபில் ஸ்கோர் என்பதை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவ்வாறு பராமரித்தால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால், அவர்களுக்கு மேலும் சில சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
சிபில் ஸ்கோர் 750க்கும் அதிகமாக வைத்திருப்பவர்கள் ஆதார் கார்டு மூலம் மிக எளிதில் கடன் பெற்று விட முடியும் என்றும், அதற்காக பல்வேறு வங்கிகள் ஒரு சில வசதிகளை அளித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிரெடிட் ஸ்கோர் குறைஞ்சிருக்கா.. இந்த 5 முக்கிய விஷயங்களில் கவனமா இருங்க..!
ஆதார் கார்டு
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அத்தியாவசியமான ஒரு அம்சமாக மாறி விட்டது என்பதும், வங்கி கணக்கு தொடங்குவது முதல் கிட்டத்தட்ட அனைத்திற்கும் ஆதார் கார்டு தற்போது தேவைப்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆதார் கார்டு மூலம் கடன்
இந்த நிலையில் ஆதார் கார்டு இருந்தால் வங்கிகளில் எளிதில் குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம் என்ற வழிமுறை ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் இது குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதன் விபரங்களை தற்போது பார்ப்போம்.
கடன் பெற நிபந்தனைகள்
தனிநபர் கடன், தொழில் கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்காக பல்வேறு ஆவணங்கள், பல மாத காத்திருப்பு மற்றும் கேரண்டி நபர்ஆகியவை கேட்கப்படுகிறது என்றும் அது மட்டும் இன்றி உடனடியாக கடன் கிடைப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிபில் ஸ்கோர்
ஆனால் அதே நேரத்தில் 750க்கும் அதிகமான சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு ஆதார் மூலம் கடன் பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் இந்த திட்டத்தின் மூலம் கடன் விண்ணப்பம் செய்பவர்களுக்கு தாமதமின்றி உடனடியாக கடன் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறைந்த வட்டி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட சில வங்கிகள் ஆதார் அட்டை மூலம் கடன் வழங்குகின்றன. இந்த திட்டத்தின்படி கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் 750க்கும் மேல் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே வங்கிகள் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவலாகும்.
சிபில் ஸ்கோர் பராமரிப்பு
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய சிபில் ஸ்கோரை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும், சரியான திட்டத்தில் கடன் பெறுதல், கடன் பெற்று விட்டு உரிய காலத்தில் அந்த கடனை அடைத்துவிட வேண்டும் போன்ற வழக்கமான வழிகளை பின்பற்றினாலே உங்களது சிபில் ஸ்கோர் நிச்சயம் 750 க்கு மேல் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் பெறுவது எப்படி?
இந்த நிலையில் சிபில் ஸ்கோர் 750 க்கும் அதிகமாக இருப்பவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு மூலம் எளிதில் கடன் பெறுவது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
* முதலில் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம் சென்று ஆதார் கார்டு மூலம் கடனுதவி என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* இதனை அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு ஓடிபி எண் வரும். அதை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
* அதன்பின் கடனுதவி திட்டத்தில் தனிநபர் கடன் என்பதை கிளிக் செய்து கடனுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
* தேவைப்படும் கடன் தொகை, பிறந்த தேதி, முகவரி ஆகிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
* அதன்பின் ஆதார் கார்டு , பான் கார்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* இதன்பின் கேஒய்சி நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அதன்பின் உங்களின் கிரெடிட் ஸ்கோர் அளவு வங்கியால் ஆய்வு செய்யப்பட்டு, 750க்கு மேல் இருந்தால், உடனடியாக கடன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
More than 750 cibil score? Get money with low interest
More than 750 cibil score? Get money with low interest | உங்களுக்கு சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருக்குதா? இதோ ஒரு சூப்பர் சலுகை!