கடந்த சில நாட்களாக கிரிப்டோகரன்சி மதிப்பு மிக மோசமாக சரிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது முதலுக்கே மோசம் ஆகும் வகையில், ‘இப்போது உங்கள் பணத்தை எங்களால் திருப்பி தர முடியாது என்ற நிலைக்கு கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் தள்ளப்பட்டு உள்ளதாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு குவியும் ஆர்டர்கள்.. பொய்யாய் போகும் மேற்கத்திய நாடுகளின் வியூகம்.. !
கிரிப்டோகரன்சி
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி என்ற டிஜிட்டல் நாணயத்தின் வர்த்தகம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. குறிப்பாக இளைய தலைமுறையினர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டினர். அனுபவமுள்ள பொருளாதார மேதைகள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதிக லாபம்
ஆனால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்ட இளைஞர்கள் பலர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சி அவர்களுக்கு நல்ல லாபம் கொடுத்ததை அடுத்து லாபம் கிடைத்த பணத்தையும் சேர்த்து கிரிப்டோகரன்சியில் அவர்கள் முதலீடு செய்தனர்.
திடீர் சரிவு
ஒரு கட்டத்தில் திடீரென கிரிப்டோகரன்சியின் மதிப்பு சரிய தொடங்கியது. இருப்பினும் மீண்டும் கிரிப்டோகரன்சி மதிப்பு உயர்ந்து விடும் என்ற நப்பாசையில் முதலீட்டை எடுக்காமல் பலரும் பொறுமை காத்தனர்.
சனிக்கிழமை வர்த்தகம்
இந்த நிலையில் பிட்காயின் கிரிப்டோகரன்சி மதிப்பு கடந்த சனிக்கிழமை 15 சதவீதம் சரிந்தது என்பதும் மற்றொரு வகையான ஈதர் கிரிப்டோகரன்சி 19 சதவீதம் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள் அச்சம்
இந்த நிலையில் கிரிப்டோகரன்சியின் தொடர் சரிவு முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்து பணத்தை எடுக்க முயற்சித்தனர்.
மன்னிக்கவும்
இந்த நிலையில் தான் அவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. முதலீடு செய்த பல முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோ வர்த்தக தளங்கள் ‘இப்போது உடனடியாக எங்களால் பணத்தை திருப்பித் தரமுடியாது என்றும், மன்னிக்கவும் என்றும், தயவுசெய்து பொறுத்திருங்கள் என்றும் பதில் வருவதாக கூறப்படுகிறது. அதாவது வித்டிராவல்-ஐ தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
முதலுக்கே மோசம்
ஏற்கனவே கிரிப்டோகரன்சியில் நஷ்டம் அடைந்து இருக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் கிரிப்டோகரன்சி மூலம் இரண்டு மடங்கு லாபத்தை எடுக்கலாம் என்ற பேராசையால் முதலீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது முதலுக்கே மோசம் என்ற நிலை வந்துள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
இது குறித்து முதலீட்டாளர்கள் கூறியபோது ‘நாங்கள் கிரிப்டோகரன்சி நிறுவனங்களிடம் தொடர்பில் தான் இருக்கிறோம் என்றும் எங்களுடைய முதலீட்டை பெறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இப்போதைக்கு இரண்டு கிரிப்டோகரன்சி நிறுவனம் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை முடக்கி உள்ளதாகவும் எப்போது அந்த பணம் கிடைக்கும் என்பதே கேள்விக்குறியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sorry, we cannot return your money says Crypto market
Sorry, we cannot return your money says Crypto market | மன்னிக்கவும், பணத்தை திருப்பி தர முடியாது: கிரிப்டோகரன்சி அறிவிப்பால் அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்