பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விலகவே, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக தெரிவு செய்யப்பட்டார்.
அப்போது, எனக்கு கிடைத்த ஆச்சரியமான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என பண்ட் தெரிவித்தார்.
அதன் பின்னர் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதால், பண்ட் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Photo Credit: BCCI
இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இரு அணிகளும் தொடரை பகிர்ந்துகொண்டன.
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி குறித்து பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
Photo Credit: AFP
அவர் கூறுகையில், ‘நான் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். நான் ஒரு விடயத்தை உணர்ந்து கொண்டேன்.
வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசும்போது, பண்ட் மிகவும் தாழ்வாக குனிந்து, கால்விரல்களில் அமரமாட்டார்.
அவர் அதிக எடை கொண்டவராகத் தோன்றுகிறார்.
மேலும் அவரது மொத்த எடையானது, அவர் எழும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது அவரது உடற்தகுதி குறித்த கேள்வியை எழுப்புகிறது. அவர் முற்றிலும் தகுதியானவரா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், பாண்ட்டின் கேப்டன்சியை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யாவும், தினேஷ் கார்த்திக்கும் ஆதரவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Photo Credit: TOI