டாக்கா : வங்கதேசத்தில் கன மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ள லட்சக்கணக்கானோர் உணவு, குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஒருவாரமாக கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சுனாம்கஞ்ச், சையல்ஹட் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் உதவியுடன் அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதி களை வெள்ளம் சூழ்ந்துஉள்ளது. அவர்கள் உணவு, குடிநீர் இன்றி தத்தளித்து வருவதாக செய்திகள் வெளியாகிஉள்ளன.
”சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் அரசின் உணவு வினியோகம் திருப்தியாக இல்லை. நாங்கள், 52 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க முயற்சித்து வருகிறோம்,” என, ‘பிரக்’ எனும் தொண்டு நிறுவனத்தின் மூத்த இயக்குனர், அரின்ஜோய் தர் தெரிவித்துஉள்ளார்.
இதற்கிடையே அடுத்த, 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என, வங்கதேச வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கதேச மழை, வெள்ளத்தில், 12 பேருக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Advertisement