உலகின் முன்னணி பிராண்டு கார்களில் ஒன்றாக இருக்கும் டெஸ்லா, பல தரப்பினரிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ள கார்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாவர்.
இன்று உலகம் முழுக்க டெஸ்லா கார் பல நாடுகளிலும் விற்பனை செய்யபப்ட்டு வருகின்றது. இந்தியாவிலும் விற்பனை செய்ய முயன்று வருகின்றது.
என்ன ஆனாலும் சரி.. ‘அந்த’ போர்டு மட்டுமே வைச்சிடாதீங்க.. ப்ளீஸ்..!
வரி அதிகம்
எனினும் இந்தியாவில் இந்த காரினை இறக்குமதி செய்ய வரியை குறைக்க வேண்டும் என கூறி வருகின்றது. குறிப்பாக டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் இந்தியாவின் இறக்குமதி வரி அதிகம். அரசு வரியினை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வருகின்றார். ஆனால் இதற்கு இதுவரையில் அரசு செவிசாய்க்கவில்லை என்றே கூறலாம்.
யாருக்கு வரிச்சலுகை?
மாறாக இங்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கார்களுக்கே வரி சலுகை அளிக்கப்படும் என்றும் கூறி வருகின்றது. டெஸ்லா நிறுவனமோ இந்தியாவில் விற்பனை செய்யவும், சேவை செய்யவும் அனுமதித்தால் மட்டுமே, இந்தியாவில் உற்பத்தியினை தொடங்குவோம் என கூறி வருகின்றது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களும் டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
மத்திய அமைச்சர் சாட்டையடி
இந்த நிலையில் வருமா? வராதா? என்ற குழப்பத்தின் மத்திலேயே இருந்து வருகின்றது. ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் மகேந்திரா நாத் பாண்டே, டெஸ்லா குறித்து சாட்டையடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.
எதற்காகவும் மாற மாட்டோம்
இது குறித்து பாண்டே, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஆத்ம நிர்பார் பாரத் கொள்கையில் வேகமக முன்னேறி வருகின்றது. அதில் நாங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ள போவதில்லை. டெஸ்லா நிறுவனத்தினை இந்தியாவில் வரவேற்கிறோம். ஆனால் நாட்டின் கொள்கையின்படி மட்டுமே அரசியல் சட்ட திட்டங்களை பின்பற்றியே ஆக வேண்டும்.
வரி எவ்வளவு?
இந்தியாவில் தற்போது 40,000 டாலர்களுக்கும் அதிகமான CIF மதிப்புள்ள முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகின்றது.
There is never a compromise in our policy; Union Minister retaliating against Tesla
Union Minister for Heavy Industries & Public Enterprises Mahendra Nath Pandey, We are not going to compromise in any way. Welcome to Tesla in India. He has said that the policy of the country should be followed only in accordance with the plans of the Constitution.