என்ன ஆனாலும் சரி.. ‘அந்த’ போர்டு மட்டுமே வைச்சிடாதீங்க.. ப்ளீஸ்..!

இந்திய பொருளாதார வளர்ச்சி மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ள பணவீக்க பாதிப்புகளை சரி செய்ய ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தும் உள்ளது.

இதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும் முன்பு திவாலானதாக அறிவித்திருக்கும் இலங்கை போல் இந்தியாவின் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் அடுத்து இந்தியாவில் என்ன நடக்கும் என தெரியாமல் காத்திருக்கும் நிலையில், பல முன்னணி பெட்ரோல் மற்றும் டீசல் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளுக்கு முக்கியமான கோரிக்கை வைத்துள்ளது.

எலான் மஸ்க் சபதம்.. டோஜ்காயினை தொடர்ந்து ஆதரிப்பேன்.. யாருக்கு இந்த பதில்?

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

இந்திய ரீடைல் எரிபொருள் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிகளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் பல மாநிலத்தில் அதிகப்படியான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

ஜியோ-BP மற்றும் நயரா எனர்ஜி

ஜியோ-BP மற்றும் நயரா எனர்ஜி

இந்நிலையில் இப்பட்டியலில் தற்போது தனியார் எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்களும் சேர்ந்துள்ளது. தனியார் துறையை சேர்ந்த ஜியோ-BP மற்றும் நயரா எனர்ஜி நிறுவனங்களின் ரீடைல் விற்பனையகங்களின் உரிமையாளர்களை பெட்ரோல் பங்குகளை திறந்து வையுங்கள், ஆனால் குறைவான அளவு மட்டுமே விற்பனை செய்யுங்கள், எரிபொருள் OUT OF STOCK போர்டு மட்டும் வைக்கமால் சமாளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

விலை உயர்வு
 

விலை உயர்வு

இதேபோல் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து விற்பனை அளவை செயற்கையாக குறைக்கவும் நிர்வாகம் கூறியுள்ளதாக ரீடைல் விற்பனையாளர்கள் எக்னாமிக் டைம்ஸ்-டம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜியோ-BP நிறுவனம் எரிபொருள் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், நயரா எனர்ஜி லிட்டருக்கு 7 ரூபாயும் அதிகரித்துள்ளது.

விற்பனை

விற்பனை

இதனால் மக்கள் இந்த ரீடைல் விற்பனையகங்களில் விற்கப்படும் எரிபொருள் அளவீடு குறைத்து சப்ளை முழுமையாக இருப்பதாக கணக்குகாட்ட முடியும் என்பது ஜியோ-BP மற்றும் நயரா எனர்ஜி நிறுவனங்களின் திட்டம்.

மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் அனைத்து பெட்ரோல் பங்க்-களையும் universal service obligation (USO) கொண்டு வந்து வர்த்தக நேரத்தில் கட்டாயம் பெட்ரோல், டீசல்-ஐ உரிய விலையில் விற்பனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கியது. இதன் வாயிலாகவே ஜியோ-BP மற்றும் நயரா எனர்ஜி நிறுவனங்கள் OUT OF STOCK போர்டு மட்டும் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி-க்கு கடிதம் அனுப்பியுள்ளார், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யக் கோரி, எரிபொருள் “பற்றாக்குறை” சாதாரண மக்களையும் மற்றும் விவசாய நடவடிக்கைகளையும் பாதிக்கிறது என தெரிவித்துள்ளார்.

பூபேஷ் பாகேல் கடிதம்

பூபேஷ் பாகேல் கடிதம்

இதோடு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது கடிதத்தில் கடந்த இரண்டு மாதங்களாக, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதில் பற்றாக்குறை உள்ளது, இதன் விளைவாக பல பெட்ரோல் பம்புகள் வறண்டு கிடக்கின்றன.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்

சத்தீஸ்கர் பெட்ரோலியம் டீலர்கள் நல சங்கத்தின் தரவுகள் அடிப்படையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) அம்மாநிலத்தில் 750 ரீடைல் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்குகளுக்கு ஒழுங்கற்ற எரிபொருள் விநியோகம் இருக்கும் காரணத்தால் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fuel Shortage Crisis: Jio-BP, Nayara ask Retail Pumps to sell less, avoid putting Out of Stock Boards

Fuel Shortage Crisis: Jio-BP, Nayara ask Retail Pumps to sell less, avoid putting Out of Stock Boards என்ன ஆனாலும் சரி.. ‘அந்த’ போர்டு மட்டுமே வைச்சிடாதீங்க.. ப்ளீஸ்..!

Story first published: Monday, June 20, 2022, 12:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.