சென்னை: 4 நாட்கள் சோதனை நடைபற்ற பிரபல வணிக நிறுவனமான எம்.ஜி.எம். குழுமம், சுமார் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை இசிஆர் கடற்கரையில் உள்ள பிரபலமான டிஸ்ஸி வேர்ல்டு பொழுதுபோக்கு பூங்கா, சொகுசு ஹோட்டல்கள் நடத்தி வரும் எம்ஜிம் குழுமத்திற்கு தொடர்புடைய சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 14ந்தேதி முதல் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த சோதனை 4 நாட்கள் நீடித்தது.
இந்த நிலையில், ரெய்டு குறித்து, வருமான வரித்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எம்ஜிஎம் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்ஜிஎம் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பணம், ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.