வரிசைகளில் நின்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொண்ட மக்கள் தற்போது இரண்டு நாட்களாக காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக சில போலி தகவல்களை நம்பி மோசடியில் சிக்கிக்கொள்ளும் நிலையும் பதிவாகி வருகின்றது.
குறிப்பாக பிற மூலங்களில் இருந்து பெட்ரோல் பெற்றுக் கொள்ளும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
பெட்ரோலில் பல்வேறு இரசாயனங்களை கலந்து விற்பனை செய்வதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் திட்டமிட்ட வகையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.