சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஒற்றுமையில்லா இரட்டை தலைமைக்கு எதிராக ஒற்றை தலைமை கோஷம் வலுத்துள்ளது. இபிஎஸ் தரப்பினர் வைத்த ஒற்றை தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பினர் நிராகரித்த னர். இந்நிலையில் எடப்பாடியின் புதிய சமரச திட்டத்தால் கோபம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 11 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, கட்சி அலுவலகத்துக்கு வெளியே வழக்கத்தைவிட பல ஆயிரம் அதிமுக தொண்டர்கள் குவிந்து கட்சி தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ்சுக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது அங்கு வந்த ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதவாளர்கள் கெரோ செய்தனர். தொடர்ந்து எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கம் இடையே மோதல் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மான புத்தகத்தை வாங்கி பார்த்து, அதற்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளித்தார். இருந்தாலும் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமாக வலுவடைந்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி அதரவாளர்களால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூற்பபடுகிறது. எடப்பாடிக்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு உள்ளதால், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்திவருகிறது. ஆனால், எடப்பாடி தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து பல மாவட்டங்களில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். ஏற்கனவே வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.வி.வீரமணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தற்போது, ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்.பி.யும், தற்போதைய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தின் 9 நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் சொந்த மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.