குடியரசு தலைவர் தேர்தலில் சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ஆகிய மூவரில் ஒருவரை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது.
இவர்கள் மூவரும் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தனித்தனியே அறிவித்தனர்.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 9 நாட்கள் உள்ளதால் மற்றொரு முயற்சியாக யஸ்வந்த் சின்ஹா-வை வேட்பாளராக நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பா.ஜ.க. தலைவரும் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் உள்ள யஸ்வந்த் சின்ஹா இரண்டு முறை மத்திய அமைச்சராக பதிவு வகித்துள்ளார்.
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மூன்று அல்லது நான்கு கட்சிகள் யஸ்வந்த் சின்ஹா-வை வேட்பாளராக நிறுத்த பரிந்துரை செய்துள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.