ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருதுவாரா மீது நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ,எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இத்தாக்குதலில் குருதுவாராவின் முஸ்லீம் காவலர் ஒருவரும் சீக்கியர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தாலிபன் அரசு தெரிவித்திருந்த நிலையில், 50 பேர் கொல்லப்பட்டதாக தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே காபூலில் மீண்டும் இந்திய தூதரகத்தைத் திறக்கும் திட்டத்தை, இத்தாக்குதல் காரணமாக மத்திய அரசு கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.