வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹராஷ்டிராவில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டம் மஹிசால் என்ற பகுதியில் ஒரே வீட்டில் 9 பேர் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு இடத்தில் 3 நான்கு பேரின் உடல்கள், வேறறொரு இடத்தில் 6 பேரின் உடல்கள் என ஒன்பது பேரின் உடல்கள் கிடந்தன. உடல்களை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் சடலமாக கிடந்தவர்கள், போபட் யால்பபா வான்மோர் , 52 என்ற டாக்டரின் குடும்பம் என்பதும் தெரியவந்தது.
![]() |
இது குறித்து மாவட்ட எஸ்.பி. கூறுகையில், கொலை நடந்ததற்கான தடயம் இருந்ததாக தெரியவில்லை. இவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. எனினும் விசாரணை நடத்தி வருகிறோம். உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா ? தற்கொலையா என்பது தெரிவரும் என கூறினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement