சரியான வரி சேமிப்பு முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது எப்படி..?

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்ய வேண்டிய நேரம் தொடங்கியுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டுக்கான (AY 2022-23) வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களை நீங்கள் ஏற்கனவே தயார் செய்துகொண்டிருக்க வேண்டும். இந்தப் பழக்கம் உங்களிடம் இருந்தால் நீங்கள் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் தான்.

எப்போதும் சரியான வரி முதலீடு மற்றும் சரியான வரி திட்டமிடல் பழக்கம் கொண்ட ஒருவரை வாழ்வில் உயரிய இடத்திற்குக் கொண்டு செல்லும் என நம்பப்படுகிறது.

நாங்க இருக்கோம்.. அக்னிபாத் திட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு..இன்னும் பல கார்ப்பரேட்டுகள் இணையலாம்!

வரி திட்டமிடல்

வரி திட்டமிடல்

சரி, வரி திட்டமிடல் ( Tax Planning) செய்வது எப்படி, இது குறைவான வரி செலுத்தி, பாதுகாப்பான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை உருவாக்குவதை உறுதி செய்வது எப்படி..?

3-புள்ளி சரிபார்ப்பும்

3-புள்ளி சரிபார்ப்பும்

இந்தக் கேள்வி மிகப்பெரியதாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தை 3-புள்ளி சரிபார்ப்புப் பட்டியல் மூலம் சரியான வரிச் சேமிப்பு முதலீடுகளைக் கண்டறிய முடியும் உங்களுக்குத் தெரியுமா..? மேலும் இந்த 3-புள்ளி சரிபார்ப்புக் கொள்கை அனைவருக்கும் பொருந்தும் என்பது கூடுதல் சிறப்பு.

முதல் படி
 

முதல் படி

வரி திட்டமிடலின் முதல் படி நீங்கள் எவ்வளவு வரியை ஏற்கனவே சேமித்து வைத்துள்ளீர்கள் என்பதைச் சரிபார்ப்பது தான். இது முக்கியமானது, ஏனென்றால் குழந்தையின் கல்வி, ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு அல்லது வீடு வாங்குவது போன்ற செலவுகள் வரிச் சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை நாம் சரியாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

இரண்டாவது படி

இரண்டாவது படி

80C இன் கீழ் வழங்கப்பட்ட 1.5 லட்சம் ரூபாய் அளவிலான வரிச் சேமிப்பிற்குக் கூடுதலாக எவ்வளவு முதலீட்டுச் செய்ய வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிவது இரண்டாவது படியாக இருக்க வேண்டும்.

80C சலுகை

80C சலுகை

நீங்கள் ஏற்கனவே எவ்வளவு வரியைச் சேமித்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தவுடன், 80C இன் கீழ் தள்ளுபடியை முழுமையாகப் பயன்படுத்தவோ அல்லது குறைக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இது மிகவும் எளிதாகக் காரியம் தான் ஆனால் இதன் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும்.

மூன்றாவது படி

மூன்றாவது படி

மூன்றாவது படி நல்ல முதலீட்டு விருப்பத்தைத் தேடுவது. முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யும் போது முதலில் உங்கள் வாழ்க்கை இலக்குகள் (உதாரணமாக ஓய்வூதிய திட்ட முதலீடு) மற்றும் உங்கள் ஆபத்து காரணிகளை (உதாரணமாக மருத்துவக் காப்பீடு) நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே

பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே

இந்த 3 படிகள் மூலம் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் அடிப்படை செலவுகள், ஆபத்துகளைத் தனியாகப் பிரித்து முதலீடு செய்யும், உபரியாகப் பணம் இருப்பின் சந்தையில் இருக்கும் பல்வேறு முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து கூடுதலான வருமானத்தைப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ITR Filing 2022: How to choose right tax-saving investments

ITR Filing 2022: How to choose right tax-saving investments சரியான வரிச் சேமிப்பு முதலீட்டுத் திட்டத்தைச் சேர்வு செய்வது எப்படி..?

Story first published: Monday, June 20, 2022, 18:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.