சென்னை : சர்வதேச யோகா தினத்தை கொண்டாட, கீழமை நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், யோகா தினத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச யோகா தினத்தை ஐ.நா.அறிவித்தது. யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில், சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி அன்று உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது அதன்படி நாளை இந்தியா உள்பட உலக நாடுகளில் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, உயர் நீதிமன்ற பதிவுத்துறை கீழமை நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களக்கும் கோயா தினத்தை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. அதில், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற வளாகங்களில், ‘ஆயுஷ்’ அமைச்சகம் கொண்டாட முடிவு செய்துள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதனால், நாளை யோகா தினத்தை கொண்டாட, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு, உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் , நீதிபதிகள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்பதை உறுதி செய்யவும் கூறியுள்ளது.