டாடாவின் பிரம்மாண்ட திட்டம்.. ஏர் இந்தியாவுக்கான பலே வியூகம்.. இனி வேற லெவல்!

ஏர் இந்தியாவை சமீபத்தில் கையகப்படுத்திய டாடா குழுமம், அதன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. அதனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செயல்படுத்தியும் வருகின்றது.

சில தினங்களுக்கு முன்பு தான் ஏர் இந்தியாவுடன், ஏர் ஆசியாவினை இணைக்க சிசிஐ ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்னி வீரர்களை வரவேற்கும் முன்னணி நிறுவனங்கள்: ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

வேகமாக முன்னேற வேண்டும்

வேகமாக முன்னேற வேண்டும்

இனியும் நேரமில்லை. நிறுவனம் மிக வேகமாக முன்னேற வேண்டும் என தகவல்கள் கூறுகின்றன. மேற்கண்ட விமானங்கள் 70% ஆர்டர்கள் குறுகிய சிறு விமானங்களாகவும், இதே 30% பெரிய விமானங்களாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

விமானங்களுக்கான ஆர்டர்

விமானங்களுக்கான ஆர்டர்

இதற்காக ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது. போயிங் விமானங்களுக்கான டெலிவரி தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக ஏர் பஸ் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர், டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா விமான நிறுவனம் தன்னை மறுசீரமைத்து வருகின்றது. கடற்படையை புதுப்பிப்பதைப் பார்ப்பதாகவும் கூறி வருகின்றது.

எரிபொருள் குறைவாக பயன்படுத்தும் நிறுவனம்
 

எரிபொருள் குறைவாக பயன்படுத்தும் நிறுவனம்

ஐரோப்பிய நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தனியார்மயமாக்கப்பட்ட பிறகு முதல் விமான ஆர்டராக இது இருக்கும். எரி பொருளை குறைவாக பயன்படுத்தும் விதமான விமானங்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்றது. இந்த வாரத்தில் ஏர் இந்தியா தனது விமானிகளுக்கு பதிவு செய்து ஒரு குறிப்பை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

படிப்படியாக வளர்ச்சி

படிப்படியாக வளர்ச்சி

பலத்த கடனில் உள்ள விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் கடந்த ஆண்டு வாங்கிய நிலையில், தற்போது படிப்படியான வளர்ச்சியினை மேம்படுத்த திட்டமிட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air India plans to add more than 200 aircraft in 4-5 years

It has been reported that Air India plans to add more than 200 new aircraft in the next 5 years as part of its next phase of development.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.