கன்னியாகுமரி அருகே ஜெயிலில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போக்சோ விசாரணை கைதி ஒருவன் டீ அருந்த வேண்டும் என்று போலீஸ் வாகனத்தை நடுவழியில் நிறுத்தச்சொல்லி அடாவடி செய்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சிறைச்சாலையில் உடல் நலக்குறைவு ஏற்படும் கைதிகளை ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேனில் அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிப்பது வழக்கம்.
சம்பவத்தன்று இதுபோன்று ஜெயிலில் இருந்து கைதிகளை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது போக்சோ வழக்கில் சிக்கிய திங்கள்சந்தையை சேர்ந்த விசாரணை கைதி தனீஷ் என்பவர், போலீசாரிடம் நடுவழியில் டீ வாங்கி கேட்டு அடம் பிடித்தார்.
பாதுகாப்பு கருதி வழியில் டீ குடிக்க முடியாது என காவலர்கள் மறுத்ததை அடுத்து போலீசாரிடம் துப்பாக்கியில் தோட்டா இருக்காண்ணா ? எனக்கேட்ட தோடு, தான் இறங்கிச்செல்கிறேன் சுடுண்ணா பார்க்கலாம் என்று வெளியே இறங்க முயன்று அலப்பறை செய்தான்.
ஏற்கனவே சிறை சுவற்றில் மோதி மண்டையை உடைத்துக் கொண்டதால் தலையில் கட்டுடன் காணப்பட்ட அந்த அந்தக் கைதி போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய நிலையில், கையில் துப்பாக்கி வைத்திருந்த காவலர்கள் பொறுமையே பெருமை என அந்த போக்சோ கைதியை சமாதானப்படுத்தினர்.
போலீசார் இன்னும் இரக்கம் காட்டினால் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னாலும் சொல்வார்கள் இந்த அடாவடி கைதிகள் என்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.