தங்கம் விலையானது இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
குறிப்பாக தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவாக காணப்படும் நிலையில், தங்கம் விலையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
இது இந்திய சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தினை குறைத்துள்ளது.
20 கன்டெய்னர்களில் தங்கம், வெள்ளி.. வாரி எடுத்து சென்ற திருடர்கள்.. இதன் மதிப்பு எவ்வளவு?
ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலை
கடந்த சில வாரங்களாக ரேஞ்ச் பவுண்ட்டிலேயே வர்த்தகமாகி வரும் தங்கம் விலையானது, தற்போது வரையில் அப்படியே தான் வர்த்தகமாகி வருகின்றது. இது டாலரின் மதிப்பானது வலுவாக காணப்பட்டாலும், சர்வதேச அளவில் ரெசசன் குறித்தான அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றமும் காணாமல், சரிவினையும் காணாமல் காணப்படுகின்றது.
முதலீட்டாளர்கள் அச்சம்
இன்று அமெரிக்க சந்தைகள் விடுமுறை என்பதால், தங்கம் விலையில் பெரியாளவில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்திலேயே 1% சரிவினைக் கண்ட தங்கம் விலையானது, இந்த வாரத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம்
அமெரிக்கா, இந்திய மத்திய வங்கிகளை தொடர்ந்து, ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவரம் என்ன?
சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது, 0.34% அதிகரித்து, 1846.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே போல வெள்ளி விலையும் 0.52% அதிகரித்து, 21.700 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
Gold prices have not changed much due to the appreciation of the dollar
The price of gold remains largely unchanged among various factors.