தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவ – மாணவிகள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளங்கலை சேருவதற்கான விண்ணப்ப பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்கியுள்ளது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதற்காக மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதையடுத்து, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஜூலை 22ஆம் தேதியை ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறும். மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.