செங்கல்பட்டு: மோசிவாக்கம் ஊராட்சியில் தேனீக்கள் கொட்டியதில், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மோசிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கூனம்பட்டரை கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 100க்கும் மேற்பட்டோர், நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளனர். கூனம்பட்டரை கிராமத்தில் செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த, சுமார் 30 பேரை தேனீக்கள் கொட்டின. இதனால், அவர்கள் வலி தாளாமல் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.