தேர்வு முடிவு பயத்தால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் ஷீபாஸ்ரீ(வயது17).
இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்த நிலையில் வீட்டில் பெற்றோர்களிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்றும் மதிப்பெண் குறைவாக வரும் என்றும் தொடர்ச்சியாக கூறி வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று மாலையிலிருந்து ஷீபாஸ்ரீயை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றில் ஷீபாஸ்ரீயை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஷீபாஸ்ரீ 344 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்நத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.