நாங்க இருக்கோம்.. அக்னிபாத் திட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு..இன்னும் பல கார்ப்பரேட்டுகள் இணையலாம்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம், வன்முறைகள் வெடித்தாலும், அதிலிருந்து அரசு பின் வாங்காது என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு புறம் இந்த திட்டத்திற்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கி வந்தாலும், மறுபுறம் பலரும் ஆதரவினையும் கொடுத்து வருகின்றனர்.

முன்னதாக மகேந்திரா குழுமத்தின் பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியில் சேர்வதற்கான வாய்ப்பினை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என அந்த நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியிருந்தார்.

அக்னிவீர்களுக்கு வரவேற்பு

தற்போது ஆர்பிஜி குழுமத்தின் ஆர்பிஜி குழுமத்தின் ஹர்ஷ் கோயங்கா, அக்னிவீர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த லிஸ்டில் பல கார்ப்பரேட்டுகள் இணையலாம் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மற்ற நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு

ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு

ஆனந்த் மகேந்திராவின் அறிவிப்புகள் வெளியான பிறகு சில மணி நேரங்களுக்கு, கோயங்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னிபாத் திட்டத்தினால் அவர்களின் சிறந்த வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும் என நம்புகிறேன். அக்னிவீர் பயிற்சியானது அவர்களை சிறந்த வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும் என நம்புகிறேன்.

திறமை வாய்ந்தவர்கள்
 

திறமை வாய்ந்தவர்கள்

அக்னிபாத் திட்டத்தினை சுற்றி நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறினேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அக்னி வீரர்கள் அவர்களை சிறந்த வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

ஆனந்த் மகேந்திரா, ஹர்ஷ் கோயங்கா போன்றவர்களின் அறிவிப்புகள், அக்னிவீர்களை ஊக்குவிக்கும் விதமாக வந்துள்ளது. இது இளைஞர்களை இந்த திட்டத்தில் இணைய ஊக்குவிக்கலாம். இந்த இரு பெரும் தொழிலதிபர்களின் அறிவிப்ப்பானது, இன்னும் சில கார்ப்பரேட்டுகளை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன வேலை?

என்ன வேலை?

அக்னிவீரர்களுக்கு என்ன விதமான வேலைகள் கிடைக்கும் என பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தலைமை பண்பு, குழு முயற்சி, உடற்பயிற்சி போன்றவற்றால் தொழில்துறைக்கு தேவையான திறன்களுடன் அக்னிவீரர்கள் வருகின்றனர். நிர்வாகம் முதல் விநியோக அமைப்பு வரை பல துறைகளில் வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Harsh goenka on recruitment of Agniveers: he hope other corporates will also join

Harsh Goenka of RPG Group welcomed the Agneepath. He also said he hopes many corporates can join the list.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.