மக்களுக்கு மேலும் அசௌகரியம் ஏற்படாத வகையில் நாட்டை தன்னிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
‘நாட்டைக் காப்பாற்றும் வாரம்’ என பெயரிடப்பட்டுள்ள போராட்ட வாரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தன்னிடம் இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி குறுகிய காலத்திற்குள் புதிய ஆணையை வெளியிட்டு ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சி அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.