கோவாவுக்கு சுற்றுலா சென்ற டெல்லி இளைஞர் ஒருவர் உற்சாக பான மிகுதியால், கடற்கரையில் சுற்றிய நாய் ஒன்றை அலையவிடுவதற்காக, கடல் அலைகளுக்கு இடையே ஹூண்டாய் காரை ஓட்டி போக்கு காட்டிய நிலையில் கடலுக்குள் காருடன் சிக்கிக் கொண்டார்.
கார்களை பார்த்தால் நாய்கள் துரத்துவது வழக்கம் அந்தப் வகையில் கோவாவுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞரின் காரை நாய் ஒன்று விரட்ட , அந்த நாய்க்கு போக்கு காட்ட கடல் அலையையொட்டி காரை லாவகவாக சுற்றி உள்ளார்
பாறைகளும் குழிகளும் நிறைந்த கடல் பகுதி என்பது தெரியாமல் ஆக்ஸிலேட்டரை சற்று அழுத்தி மிதித்ததால் அடுத்த நொடியே கடலுக்குள் பாய்ந்த ஹூண்டாய் கிரிட்டா கார் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது
நாய்க்கு போக்கு காட்டிய இளைஞர்கள் , நாலு சுற்று சுற்றிய நிலையில் தாங்கள் வந்த காரை கடலுக்கு வாரி கொடுத்து விட்டு அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
கடல் நீர் உட்புகுந்ததால் காரின் என்ஜின் சர்வ நாசமடைந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அந்த காரை மீட்டு எடுத்து செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒரு புறம் மேற்கொண்டனர். இதற்க்கிடையே விபரீதமாக கார் ஓட்டிய இளைஞரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.