நுவரெலியா மாவட்டத்தில் கிராம மட்டத்தில் 500 உணவு பாதுகாப்பு களஞ்சியங்களை நிறுவும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்ட நிகழ்வு விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமாரஇ நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோரின் தலைமையில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கலுகல கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் 18ஆம் திகதி இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உலர் உணவு பொருட்களை பாதுகாத்தல்இ நிலையான விதைகளை சேகரித்தல்இ தண்டுகளை நடவு செய்தல்இ தோட்டக்கலைஇ வாராந்த கண்காட்சிஇ குறைந்த செலவில் சத்தான உணவு பதப்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட உதவிச் செயலாளர் திருமதி ஷாலிகா லிந்தகுபுரஇ அம்பகமுவ பிரதேச செயலாளர் திருமதி சித்தாரா கமகேஇ பிரதேச செயலாளர்கள்இ மாகாண மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.