பெங்களூரு,
பெங்களூருவில் ரூபாய் 28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
அதை தொடர்ந்து அந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது :
பெங்களூருவை போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுவிப்பதற்காக, இரயில், சாலை, மெட்ரோ மற்றும் சுரங்கப்பாதை, மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட சாத்தியமான அனைத்து வழிகளிலும் அரசு செயல்பட்டு வருகிறது. பெங்களூரு புறநகர் பகுதிகளுடன் சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பே செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளை முடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் பணிகள் அப்போதே முடிந்திருந்தால், பெங்களூருவின் சுமை அதிகரித்திருக்காது. அதனால்தான் நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.