புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராக உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 3 நாட்களாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சோனியா காந்தி மருத்துவமனையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராவதை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை, ராகுல் காந்திக்கு 3 நாள் அவகாசம் அளித்துள்ளது.
இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராக உள்ளார்.