கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, பிரசவத்திற்குப் பிறகும் ஆரோக்கியமான உணவு புதிய தாய்மார்களுக்கு அவசியம். சத்தான உணவுகளை உட்கொள்வது பாலூட்டும் தாய்மார்களுக்கு வலிமையை மீட்டெடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், உகந்த ஊட்டச்சத்துக்காக புதிய தாயின் உணவில் சேர்க்கக்கூடிய சில உணவுகளைப் பகிர்ந்துள்ளார்.
“பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும், இதனால் குழந்தை வலுவாகவும், புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்,” என்று அவர் கூறினார்.
பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டுய சில உணவுகள் இங்கே!
பப்பாளி
பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தாய்ப்பாலின் அளவையும், தரத்தையும் அதிகரிக்கும். பப்பாளியின் வழக்கமான உட்கொள்ளல் செரிமான அமைப்புக்கு அதிசயங்களைச் செய்யும். இது செல்லுலைட் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது.
டேலியா
டேலியா (உடைத்த கோதுமை) பலவிதமான ஆரோக்கிய நலன்களுடன் நிரம்பியுள்ளது. உடைத்த கோதுமையில் தயாரிக்கப்படும் டேலியா ஜீரணிக்க எளிதானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் நார்ச்சத்து அதிகம். மேலும் ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் மற்றும் பி வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. பெக்டின் நிறைந்த, இந்த சூப்பர்-எனர்ஜிஸிங் பழம்’ இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இது ஒரு ப்ரீபயாடிக் ஆகும், இது பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவை வழங்குகிறது. இதில் உள்ள மெக்னீசியம், பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
தண்டு கீரை
இது புதிய தாய்மார்களுக்கான ஆல் இன் ஒன் ஊட்டச்சத்து சூத்திரமாகும். பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தலை எதிர்த்துப் போராட இது உதவும். இது இரும்பு, மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இது வலிமையை மீண்டும் பெற உதவுகிறது.
ஊறவைத்த நட்ஸ்
ஊட்டச்சத்தின் மற்றொரு சக்தியாக அறியப்படும் உலர் பருப்புகளில், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் கே மற்றும் பி போன்ற அத்தியாவசிய தாதுக்கள் அதிகம் உள்ளன. அவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் ஆரோக்கியமான ஆதாரமாகவும் உள்ளன. அத்துடன் உலர் பருப்புகள் லாக்டோஜெனிக் என்றும் கருதப்படுகிறது.
பால்
தாய் அல்லது குழந்தைக்கு ஒவ்வாமை இல்லாத நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் போது பால் குடிப்பது ஒரு சிறந்த தேர்வாகும். இதில் எட்டு கிராம் புரதம், தினசரி வைட்டமின் பி12 தேவையில் 50 சதவீதம், தினசரி கால்சியம் தேவையில் 25 சதவீதம் மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி தினசரி தேவைகளில் 15 சதவீதம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“