நட்சத்திர தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 9ஆம் திகதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டது.
இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். திருமணம் முடித்த கையோடு திருப்பதி சென்ற நட்சத்திர தம்பதி, அங்கு கடவுள் தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.
இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார். அதே போல் அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற விக்னேஷ்சிவன், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக இவர்கள் தேனிலவு செல்லவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த ஜோடி தாய்லாந்து சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.