பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் இன்று நிதியமைச்சர் சந்திப்பு: என்ன காரணம்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அவ்வப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்வதற்காகவும் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது? அந்த திட்டங்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளது? என்பது குறித்து கருத்துக்கள் பரிமாறப்படும்.

10ஆம் வகுப்பு மாணவிக்கு எல்ஐசி நோட்டீஸ்.. களத்தில் இறங்கிய நிர்மலா சீதாராமன்.. என்ன நடந்தது..?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த பின்னர் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நடத்தும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

கடந்த சில மாதங்களாக பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ளது என்பதும், குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் மந்தமான பொருளாதார நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடனடி கடன்
 

உடனடி கடன்

இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் வகையில், உற்பத்தி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு விரைவாக வங்கிகள் கடன் வழங்க மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், தகுதி வாய்ந்த தனி நபர்களுக்கும் உடனடியாக கடன் வழங்க உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வங்கிகள் எந்த அளவுக்கு இதுவரை கடன் வழங்கி உள்ளது? வாரக்கடன்களின் நிலைமை எந்த அளவுக்கு உள்ளது? மற்றும் அவசரகால கடனுதவி உறுதி அளிப்பு திட்டம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர கால கடன் உதவி திட்டம்

அவசர கால கடன் உதவி திட்டம்

அவசர கால கடன் உதவி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் கடன் வழங்கும் தொகை 5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகளின் லாபம்

பொதுத்துறை வங்கிகளின் லாபம்

கடந்த நிதி ஆண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் நல்ல லாபத்தை பெற்றுள்ளன என்றும் குறிப்பாக 12 பொதுத்துறை வங்கிகளின் ஒட்டு மொத்த லாபம் ரூபாய் 31,820 கோடியாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நஷ்டத்தை சந்தித்து வந்த வங்கிகள் தற்போது லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

FM Nirmala Sitaraman meet public sector banks head

FM Nirmala Sitaraman meet public sector banks head | பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் இன்று நிதியமைச்சர் சந்திப்பு: என்ன காரணம்?

Story first published: Monday, June 20, 2022, 8:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.