போலி சீன நிறுவனங்களுக்கு உதவியதாக 400 கணக்கர்கள், செயலர்கள் மீது நடவடிக்கை

புதுடெல்லி: 2020-ம் ஆண்டு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிகழ்வை அடுத்து இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் மீதும் சீன தயாரிப்புகள் சார்ந்தும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. எனினும், சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் போலி நிறுவனங்கள் தொடங்கும் முயற்சியை மேற்கொண்டுவந்தனர். இவர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த பட்டயக் கணக்கர்கள், நிறுவனச் செயலர்கள் உதவி வழங்கிவருவதாக மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தபடி இருந்தன. அதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், இந்திய பெரு நகரங்களில் நிறுவனத்தைப் பதிவு செய்ய சீன போலி நிறுவனங்களுக்கு விதிகளை மீறி உதவியதாக 400 பட்டயக் கணக்கர்கள் மற்றும் செயலர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி நிறுவன விவகாரத் துறை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.