சென்னைக்கு அருகே மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்க்ளில் துணை நகரங்கள் அமைப்பதற்கான பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் துணை நகரங்கள் அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெறத் தொடங்கியுள்ளது.
சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்து வருவதால், ஏற்ப, சென்னையை ஒட்டிய பகுதிகளில், துணை நகரங்களை அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய 5 இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகளுக்காக ஒரு தலைமை திட்ட அதிகாரி மற்றும் 16 உதவி திட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.-வின் முதலாவது முழுமை திட்டப்படி மறைமலை நகர், மணலி புதுநகர் ஆகிய துணை நகரங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த திட்டம் பல்வேறு காரணங்களால், எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இருப்பினும், முதலாவது முழுமை திட்டத்தில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டு, மீண்டும் கள ஆய்வு நடத்தி, துணை நகரங்கள் அமைக்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 2008ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும் இந்த விஷயத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால், துணை நகரம் அமைக்கும் பணி முழுவதுமாக முடங்கியது.
இந்த நிலையில், சென்னை பெருநகரில் உள்ள ஐந்து இடங்களில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்தப்படும் என சமீபத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர், ஆகிய 5 இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான அடிப்பையான பணிகளைத் தொடங்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்காக, ஒரு தலைமை திட்ட அதிகாரி தலைமையில், 16 உதவி திட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்பு அதிகாரிகள் பிரிவை உருவாக்கி சி.எம்.டி.ஏ நியமனம் செய்துள்ளது. சி.எம்.டி.ஏ நிர்வாகம் வாரம் ஒரு முறை ஆய்வு கூட்டம் நடத்தி, புதிய துணை நகரங்களுக்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய 5 இடங்களிலும், புதிய துணை நகரங்கள் அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துணை நகரங்கள் அமைக்கப்பட்டால், சென்னையை சுற்றி அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர் 5 இடங்களும் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடையும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அனைத்து அடிப்படை கட்டமைப்புகளுடன், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை செய்து, புதிய துணை நகரங்களை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையை ஒட்டி 5 இடங்களில் துணை நகரங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், துணை நகரங்கள் அமைக்கும் பணி ஜரூராக நடைபெறத் தொடங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“