அமெரிக்கா முதல் பிரிட்டன் வரையில் அனைத்து முன்னணி வல்லரசு நாடுகளும் மிகவும் மோசமான பணவீக்கத்தில் சிக்கி தவித்து வருவது மட்டும் அல்லாமல் பொருளாதார மந்த நிலைக்குள் நுழையும் அபாயத்தில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
இதேவேளையில் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்திய பொருளாதாரமும் இதன் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் வாங்கனும்.. 6 கோடி கடன் வேணும்.. வங்கி அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த விவசாயி..!
இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இன்று நிர்மலா சீதாராமன் முக்கியமான கூட்டத்தை நடத்தியுள்ளார்.
கஸ்டமர் ப்ரென்ட்லி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை நாட்டின் அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக நடந்துகொள்ள வேண்டும் அதாவது கஸ்டமர் ப்ரென்ட்லியாக இருப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம்
இந்த மாற்றத்தைக் கொண்டு வருவது மூலம் கடன் வாங்குபவர்களுக்குக் கடன் பெறும் செயல்முறை மிகவும் எளிதாக இருப்பது மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தை வளர்ச்சி அடைந்து, உற்பத்தி துறை மேம்பட்டு நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி சேவை
அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் ஒத்திவைப்பதில் எவ்விதமான தளர்வுகளையும் அளிக்கக் கூடாது என்பதைக் குறிப்பிட்டு வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில், நிதியமைச்சர் வங்கிகளின் செயல்திறன், கடன் வளர்ச்சி, சொத்துத் தரம், மூலதனத் தேவைகள் மற்றும் அரசாங்கத்தின் அவுட்ரீச் திட்டங்களின் கீழ் நிதி சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தார்.
எஸ்பிஐ வங்கி
இது குறித்துப் பேசிய எஸ்பிஐ வங்கி தலைவர் தினேஷ் காரா, வாடிக்கையாளர்களின் நலனுக்காக வங்கி சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி சேவையில் இருக்கும் சிக்கல்களில் இருந்து விடுபடுவார்கள் எனத் தெரிவித்தார்.
FM Nirmala Sitharaman ask banks to be more customer friendly
FM Nirmala Sitharaman ask banks to be more customer friendly முதலில் இதைச் செய்யுங்க.. நிர்மலா சீதாராமன் போட்ட திடீர் உத்தரவு..!