இலங்கையில் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலையை காண முடிகிறது. உணவு பொருட்கள், எரிபொருட்கள், என பலவும் விலை உச்சத்தில் காணப்படுகின்றது. இந்த நெருக்கடியான நிலையை கட்டுக்குள் கொண்டு வர இலங்கை அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
குறிப்பாக குறைந்த விலையில் எரிபொருட்களை வாங்க திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளையும் வழங்க முடியும்., பணவீக்கத்தினையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என இலங்கை அரசு திட்டமிட்டு வருகின்றது.
பிட்காயின் நிலைமை என்ன தெரியுமா.. கதறும் முதலீட்டாளர்கள்..!
இலங்கையின் பிரச்சனை
இன்று இலங்கையின் மிகப்பெரிய பிரச்சனையே உணவு பொருட்கள் விலை, எரிபொருள் விலை ஏற்றம், இறக்குமதி சரிவு, போதிய அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாமல் தடுமாறி வருகின்றது.
இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்க இலங்கை நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை நிறுவனங்கள் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை
இதற்காக பல இலங்கை நிறுவனங்கள் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்த கூறிவருவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார நடவடிக்கைகளை மேம்படித்த நடவடிக்கை எடுப்பதாக சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய தூதுவர் கூறியிருந்தத்து குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்கும்
மேலும் இலங்கைக்கு தேவைப்படும் அனைத்து சந்தர்பங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் ரஷ்ய தூதுவர் உறுத்தியளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில் தான் பல இலங்கை நிறுவனங்களும் ரஷ்யாவுடன் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பேச்சு வார்த்தை நடத்த கூறி வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறக்குமதியில் சுணக்கம்
இலங்கையின் ஒரே ஒரு சுத்திகரிப்பு ஆலை கடைசியாக சைபீரியன் ஏற்றுமதியுடன் இயங்கி வருகின்றது. 1948ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.
இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு சரிவின் மத்தியில், இறக்குமதியில் பெரியளவிலான சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தட்டுப்பாடு
பொருளாதார நெருக்கடி, உணவு, மருந்து பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை, கழிப்பறை காகிதம், தீப்பெட்டிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. குறிப்பாக சமையல் எரிவாயு, எரிபொருளுக்காக பல மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்தியா மட்டுமே உதவி
இலங்கையின் அச்சடித்த பணம் இரு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ந்து விட்டாலும், இன்று வரையில் இலங்கையின் பிரச்சனை சரி செய்யப்பட்டதாக தெரியவில்லை. மொத்தத்தில் கடனில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க உதவுவதற்காக, இந்தியா பல உதவிகளை வழங்கியுள்ளது. தற்போது வரையில் இலங்கைக்கு இந்தியாவினை தவிர வேறு எந்த நாடும் உதவவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது நினைவுகூறத்தக்கது. .
sri lankan firms suggested buy to russia for crude oil: sri lanka minster kanchana wijesekara
Sri Lankan minister has said that Sri Lankan companies are ask to talks with Russia to buy oil.