ரூ.100 கோடி டர்ன் ஓவர்: குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் நிறுவனத்தின் அசத்தலான வெற்றி!

சிக்கன் விற்பனையின் மூலம் ஒரு நிறுவனம் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் உண்மை அது தான்.

கேரளாவில் உள்ள குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்து அசத்தியுள்ளது.

கேரள மாநில அரசின் நிறுவனமான இந்த நிறுவனத்தின் வெற்றி பாதை குறித்து தற்போது பார்ப்போம்.

191 பேரை வீட்டுக்கு அனுப்பிய சிட்டிமால்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. ஏன்?

கேரளா சிக்கன் மார்க்கெட்

கேரளா சிக்கன் மார்க்கெட்

கேரள மாநிலத்தில் சிக்கன் மார்க்கெட் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்திற்கு சுமாராக தினமும் 10 லட்சம் கோழிகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் ஒட்டுமொத்த கோழி உற்பத்தி வெறும் 10 சதவீதம் மட்டுமே என்பதால் மீதமுள்ள 90 சதவீத தேவையை மற்ற மாநிலங்களை கேரளா நம்பியிருந்தது.

கோழிப்பண்ணை

கோழிப்பண்ணை

இந்த நிலையில்தான் கேரளாவை ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவிலேயே கோழி பண்ணை அமைக்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்தது. அதுதான் குடும்பஸ்ரீ கேரளா சிக்கன்.

குடும்பஸ்ரீ கேரளா சிக்கன்
 

குடும்பஸ்ரீ கேரளா சிக்கன்

கடந்த 2017ஆம் ஆண்டு கேரள அரசின் கால்நடை பராமரிப்பு துறை, மாநில கோழி வளர்ப்பு கழகம், கேரளா கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தொடங்கியதுதான் இந்த குடும்பஸ்ரீ கேரள சிக்கன் நிறுவனம். இதுவரை சுமார் 80 லட்சம் கிலோ கோழி இறைச்சி சப்ளை செய்யப்பட்டு உள்ளதாகவும் அது அதுமட்டுமின்றி சந்தை விலையை விட மிகவும் மலிவான விலைக்கு சப்ளை செய்யப்பட்டு உள்ளதாகவும் குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் தெரிவித்துள்ளது.

எந்தெந்த நகரங்கள்?

எந்தெந்த நகரங்கள்?

திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வரும் குடும்பஸ்ரீ கேரளா சிக்கன், விரைவில் மற்ற நகரங்களிலும் தொடங்க திட்டமிட்டு உள்ளது.

விவசாயிகள்

விவசாயிகள்

இந்த திட்டத்தின்படி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கோழி வளர்ப்பது எப்படி? என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பயிற்சிகளும் முடிந்த பின்னர் கோழிக்குஞ்சுகள், தீவனம் ஆகியவை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவ்வப்போது கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி மற்றும் தரமும் குடும்பஸ்ரீ கேரள நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகிறது.

வருமானம் எவ்வளவு?

வருமானம் எவ்வளவு?

40 முதல் 45 நாட்கள் கழித்து கோழி குஞ்சுகள் சுமார் 2 கிலோ எடையை எட்டியதும் விவசாயிகளிடமிருந்து பணம் கொடுத்து கோழிகள் பெறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கோழிப் பண்ணையாளர்கள் மாதம் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும், அதேபோல் சிக்கன் விற்பனை நிலையங்கள் மாதம் 80,000 முதல் 90,000 வரை வருமானம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானியம்

மானியம்

அதேபோல் இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு 9.3 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த கட்டணமாகவும், 11.5 கோடி ரூபாய் விற்பனை நிலைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அது தவிர கால்நடை பராமரிப்பு துறை மூலமாகவும் சுமார் 23 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1000 புதிய பண்ணைகள்

1000 புதிய பண்ணைகள்

அடுத்த 5 ஆண்டுகளில் கேரளாவில் பிராசஸிங் ஆலை ஒன்றை செயல்படுத்த இருப்பதாகவும் அதன்படி ஆண்டுக்கு 1000 புதிய பண்ணைகள் அமைக்கவும், 500 விற்பனை நிலையங்கள் புதிதாக தொடங்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டர்ன் ஓவர்

டர்ன் ஓவர்

கடந்த 2019 – 2020 ஆம் நிதியாண்டில் ரூ.6.2 கோடி மட்டுமே டர்ன் ஓவர் செய்த இந்த நிறுவனம் 2020 – 21 ஆம் நிதியாண்டில் 9 கோடியும் 2021 – 22 ஆம் நிதியாண்டில் 67 கோடி டர்ன் ஓவர்செய்து மொத்தம் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவரை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.100 crores turnover of kudumbashree kerala chicken: A success story

Rs.100 crores turnover of kudumbashree kerala chicken: A success story | ரூ.100 கோடி டர்ன் ஓவர்: குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் நிறுவனத்தின் அசத்தலான வெற்றி!

Story first published: Monday, June 20, 2022, 16:33 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.